Friday, March 20, 2026

பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

SHARE


 கடந்த பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை சராசரியாக பேரலுக்கு 69 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,500ஆக இருந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி விலை பேரலுக்கு 140 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14,000 ரூபாயாக அதிகரித்திருந்தது.


அதன்படி கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரை கடந்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றால், எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.


இதனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 140 டாலரை கடந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் நிதிநிலை கடுமையான பாதிப்பை சந்திப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில் பிரீமியம் பெட்ரோல் விலையை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.87லிருந்து ரூ.101.89 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை அதிகரித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 #type=(blogger):