Friday, May 1, 2026

அநியாயமான சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து, மே 6 ஆம் தேதி 24 மணி நேரத்திற்கு ஹோட்டல்களை மூடி வைத்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது கேரளா ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் அசோசியேஷன்.

SHARE

கொச்சி:
அநியாயமான சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து, மே 6 ஆம் தேதி 24 மணி நேரத்திற்கு ஹோட்டல்களை மூடி வைத்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது கேரளா ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் அசோசியேஷன்.
தற்போது ஒரு சிலிண்டரின் விலை ₹993 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மொத்தமாக ₹1498 வரை ஒரு சிலிண்டருக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் விநியோக துறைக்கு எந்த விதத்திலும் தாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடையடைப்பு போராட்டத்திற்கு முன்பாக, யூனிட் மற்றும் மாவட்ட அளவுகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும். மே 6 அன்று ஹோட்டல்கள் மூடப்பட்டு, மாவட்ட தலைமையகங்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் எதிர்ப்பு பேரணி மற்றும் தர்ணா நடத்தப்படும் என, கேரளா ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் மாநில தலைவர் ஜி. ஜெயபால் மற்றும் பொது செயலாளர் என். அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 #type=(blogger):